இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தொற்று!
டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகம் உள்ள இடங்களாக 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
இந்த பகுதிகளில் அதிகமான எண்ணிக்கையானவை மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் காணப்படுகின்றன.
அங்கு சுமார் 36,076 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும்.
2023 இல் இதுவரை மொத்தம் 76,846 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 16,257 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை 7,995 ஆக உள்ள நிலையில், இதுவே கடந்த நான்கு மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவு செய்துள்ள மாதமாக பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 7,369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,அதன் பின்னர் அதற்கு நிகரான அளவில் வழக்குகள் பதிவான மாதமாக நவம்பர் மாதம் திகழ்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், இந்த ஆண்டில் (2023) இதுவரையில் டெங்கு நோயினால் மொத்தம் 46 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.