டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 00 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 406 ரூபா 81 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 422 ரூபா 61 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபாய் 67 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 363 ரூபாய் 10 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபாய் 77 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 44 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 04 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 250 ரூபாய் 60 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாயிலிருந்து 322.41 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.39 ரூபாயிலிருந்து 333.65 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாயிலிருந்து 323 ரூபாய் மற்றும் 332 ரூபாயிலிருந்து 333 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.