News
எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது – பந்துல குணவர்தன
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதற்காக, விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்றைய தினம் (06) இடம்பெற்ற அமைச்சரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உலக சந்தை நிலைவரம் மற்றும் டொலரின் பெறுமதி என்பவற்றின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்த உடனேயே போட்டித்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.
எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.