வனாட்டு தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
பசிபிக் பெருங்கடலிலுள்ள வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கமானது நேற்றைய தினத்தில்(7) 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கமானது கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
எரிமலைகளைக் கொண்டுள்ள இத் தீவானது, இயற்கை பேரழிவுகளால் பாதிப்படைய கூடிய நாடுகளில் ஒன்றாக உலக இடர் அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.