News
குடியேறிகளின் வருகையால் கனடாவில் அதிகரிக்கும் பணவீக்கம்
அண்மைக்காலமாக கனடா பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அறிந்த ஒன்றே ஆகும். இந்நிலையில், கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வருகை தருவதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கனடிய மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் டோனி கிராவில் தெரிவிக்கையில்,
குடியேறிகளின் வருகையானது வீடுகளுக்கான கேள்வி உயர்வடையும், இதனால் நாட்டில் பணவீக்கம் உயர்வடையும் நிலை உருவாகும். மேலும், வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கச் செய்யும்.
அதேசமயம், குடியேறிகளின் வருகையானது நாட்டுக்கு பல்வேறு நலன்களை கிடைக்கச் செய்யும், நாட்டின் தொழிற்சந்தையில் குடியேறிகளின் பங்களிப்பு முக்கியமானது.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.