இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் அடையாள பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு இன்றும் (11) தொடர்வதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 27ஆயிரம் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் இந்த வேலை நிறுத்தத்தின் மற்றுமொரு நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் நேற்று (10) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நாளை (12) நள்ளிரவு வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.