மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அஸ்வெசும தொடர்பில் ரணில் எடுத்த முடிவு
அரசாங்கத்தின் அஸ்வெசும எனும் நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து இதற்கு தேவையான ஒதுக்கீடுகள் கிடைக்கும் என சிறிலங்கா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அஸ்வெசும பயனாளர்களில் 12 இலட்சம் பேர் வலுவூட்டல் வேலைத்திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.