News

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பெட்ரோல் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க மீண்டும் கூட்டுத்தாபனம் தயாராகி உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பணத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும், அவ்வாறு வழங்கப்படாவிடின் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த நேரிடும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது 238 சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் இயங்கி வருவதாகவும், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தற்போது 2.75 சதவீத தரகு பணம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்படும் தரகு தொகையில் 0.25 சதவீதத்தை மாதாந்திர பயன்பாட்டு கட்டணமாக கூட்டுத்தாபனம் வசூலிப்பதாகவும்  எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை அறவிடுவது நியாயமற்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முன்மொழிவு 2006 இல் முன்வைக்கப்பட்ட போதிலும், 2014 இல் கலந்துரையாடல்கள் மற்றும் 2021 இல் இயக்குநர்கள் குழுவின் முடிவின் பின்னர், பயன்பாட்டுக் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், எரிபொருள் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை 1053 என்ற சுற்றறிக்கை மூலம் வசூலிக்க கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எரிபொருள் உரிமையாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 12 தவணைகளில் செலுத்த வேண்டும் எனவும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button