மின்சார சபை ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இதற்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றின் மூலம் தெரியபடுத்தியுள்ளார்.
அத்தோடு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வருடாந்த கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் குறித்த தகவல்களை வழங்குமாறும் அமைச்சர் மின்சார சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபையின் நிர்வாக மற்றும் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக கடந்த வருடங்களில் வருடாந்த போனஸ் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த 25 சதவீத சம்பள உயர்வும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.