செயலிழந்த எக்ஸ் தளம்: அதிர்ச்சியில் பயனாளர்கள்
மிகவும் பிரபல்யமான சமூக ஊடகமான எக்ஸ்(டுவிட்டர்) இன்று செயலிழந்து காணப்பட்டுள்ளது.
பல மில்லியன் கணக்கானோர் எக்ஸ்(டுவிட்டர்) தளத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் எக்ஸ் தளத்தின் உள்ளே பயனாளர்களுக்கு பக்கங்கள் காண்பித்தாலும், அதில் யாருடைய பதிவுகளும் காட்டப்படவில்லை.
மேலும் பின்தொடர்தல் (Follow), உங்களுக்காக (For you) உட்பட அனைத்தும் வெற்றிடமாக காணப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்களின் பதிவுகளை உருவாக்கலாம் பதிவிடலாம் ஆனால், அந்த பதிவுகள் யாருக்கும் காண்பிக்கபடவில்லை.
பயனாளர்களுக்கு தெரிவுநிலையை மட்டுமே இந்தச் சிக்கல் பாதித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஏனென்றால், இந்த முடக்கம் வெளிவந்த சில நிமிடங்களில் “#XDown” என்ற வார்த்தை பிரபல்யமடைந்து வருகின்றது.
இந்நிலையில், எக்ஸ் தளம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றியது குறிப்பிடத்தக்கது.