News

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் மாற்றம்: முன்வைக்கப்பட்ட யோசனை

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் மாற்றம்: முன்வைக்கப்பட்ட யோசனை | Pension Of Government Employees Consider Canceling

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த யோசனை அரசியல் மயப்படுத்தல் தொடர்பான தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலைய செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை ஓய்வூதியத்தை இரத்து செய்து பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, பங்களிப்பு ஓய்வூதியத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முதலீடு செய்யக் கூடியதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தான பணி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button