அனைத்துக் கொடுப்பனவுகளுக்குமான நிதி விடுவிப்பு!
பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2023 டிசம்பர் 15 வரை அனைத்து அரச நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுக்கும் அவசியமான நிதியை விடுவிக்க திறைசேரி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் ஒரு வருடத்திற்குள் குறித்த ஆண்டிற்கான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட ஒரே ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமைகின்றது.
2022 டிசம்பர் மாதமாகும்போது, அதற்கு முந்தைய 18 மாதங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஒன்று சேர்ந்து வழங்க வேண்டியிருந்த ஓய்வூதியப் நிலுவைத் தொகை உட்பட, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19 வரை, அன்றைய தினத்தில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை முறையாக செலுத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.