News
டொனால்டு டிரம்புக்கு விதிக்கப்பட்ட மற்றொரு தடை
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள டொனால்ட் ட்ரம்ப் இற்கு அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாகவுள்ள டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடக்கூடாது என்று கொலராடோ மாகாணத்தைத் தொடர்ந்து மைனே மாகாணத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.