இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கியின் கணிப்பு
நாட்டின் பொருளாதாரம் 2023இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
அத்துடன் 2022 – 2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.