கூகுள் மற்றும் அமேசானின் அதிரடி நடவடிக்கை : நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்.
உலகளாவிய ரீதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புக்களை ஈடு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இந்த வருடத்தில் அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதன்படி, கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் பிரிவில் பணி புரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமேசான் நிறுவனத்தின் பிரைம் வீடியோ மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோ பிரிவின் பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அமேசானுக்குச் சொந்தமான லைவ் ஸ்ட்ரீமிங் தளமான Twitchன் சுமார் 500 ஊழியர்கள் இந்த வாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில், அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து இதுபோன்ற பணி நீக்கங்கள் நடைபெறுவது தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.