Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தொடர்ந்தும் அதிகரிக்கும் மரக்கறிகள் விலை!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும் வெளிநாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மரக்கறிகளின் கொள்வனவு மற்றும், விற்பனை விலைகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ள குறித்த பட்டியலில் மரக்கறிகளின் இந்த விலை உயர்வும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிவப்பு கோவா 3,700 ரூபாய், புரக்கோலின் 4,000 ரூபாய், பெஸில் இலை 3,000 ரூபாய், ஐஸ்பேர்க் 2,600 ரூபாய் என மொத்த விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியாவில் இருந்து வெளியிட சந்தைகளுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கோவா 520/= ரூபா, கரட் 1400/=ரூபா, லீக்ஸ் 470/=ரூபா, ராபு 170/=ரூபா, இலை வெட்டா பீட் 420/=ரூபா, இலை வெட்டிய பீட் 520/=ரூபா, உருளைக் கிழங்கு 320/=ரூபா, சிவப்பு உருளை கிழங்கு 340/=ரூபா, நோக்கோல் 370/=ரூபா என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலமாக நாட்டில் விற்பனையாகும் மரக்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறியக்கூடியவாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button