இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
உச்சநீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே சட்டமூலத்தில் கையொப்பமிடுமாறு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.