News
அரச சேவையில் 600 புதிய நியமனங்கள்: சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
முதுநிலை பயிற்சி பெற்ற 600 மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு கொழும்பு மருத்துவ பீடத்தின் (UCFM Tower) புதிய கட்டடத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் தற்போது உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த வைத்தியர்களை நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு நியமிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது, நாட்டின் சுகாதார சேவையில் 22,000க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், 2022 ஆம் ஆண்டில் 1622 பயிற்சி மருத்துவர்களை நியமிக்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.