News
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (07) இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
2024 ஜனவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.3% அதிகரித்து 4,491 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, இது 2023 டிசம்பரில் பதிவான 4,392 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து ஏற்பட்ட அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.
இதில் சீனாவின் மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியும் அடங்குவதாகவும், இது பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.