News
சட்டவிரோதமாக இறக்குமதியான 100 வாகன உதிரிபாகங்களை அழிக்க நடவடிக்கை!
கடந்த 5 வருடங்களில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களின் ஒரு தொகை நாளை (20) ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் அழிக்கப்படவுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் விசாரணைக்கு பின்னர் இந்த வாகன உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட இத்தகைய உதிரி பாகங்கள் பெருமளவில் உள்ளன அவற்றில் சுமார் 100 பாகங்கள் ஆரம்ப கட்டமாக அழிக்கப்படுகின்றன.
பிற பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி, இந்த உதிரி பாகங்கள் போலி ஆவணங்களை தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த உதிரி பாகங்கள் சந்தையில் வெளியிடப்பட்டால், தரமற்ற வாகனங்கள் கூட்டிணைக்கப்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக உதிரி பாகங்களை அழிக்க நடவடிக்கை எடுப்பதாக சுங்கத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.