வாகன உரிமையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு
வாகனம் ஒன்றை விற்பனை செய்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் படிவத்தை பூர்த்தி செய்து மோட்டார் வாகன ஆணையாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு வாகன உரிமையாளர்களிடம் மோட்டார் ஆணையாளர் நிஷாந்த அனுருத்த கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர்கள் வாகனங்களை வாங்கும் போது, அதற்குரிய படிவத்தை முன்பிருந்த உரிமையாளர் அனுப்பாத நிலையில், குற்றத்திற்காக வாகனத்தை பயன்படுத்தினால், வாகனத்தின் அசல் உரிமையாளருக்கு சிரமம் ஏற்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி முதல் கொழும்பில் இயங்கி வரும் சி.சி.டி.வி. கமரா அமைப்பின் பரிசோதனையின் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 560 பேர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
தவறு செய்யும் வாகன சாரதிகளுக்கு எதிராக 190 காவல் நிலையங்கள் ஊடாக அபராத சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.