News

தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கப்படும்!

மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படுமென நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வேறு தெரிவுகள் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button