இலங்கையின் ஆட்சி மாற்றம் : வெளியான தகவல்!
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகுமா எனும் கேள்வி தற்போது பலர் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் காரணத்தால் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை எதிர்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நூற்றுக்கு ஒன்பது வீதமான மக்கள் ஆதரவு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் செயல்படும் தற்போதைய அரசாங்கம், தேர்தல்களில் பாரிய தோல்வியை எதிர்நோக்குமென பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.