மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறான காலப்பகுதியில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு எதிராக நாடளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன்போது, சுயாதீனமாக சம்பளத்தை உயர்த்தும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சம்பள அதிகரிப்பு தொடர்பிலான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சர் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஆளும் கட்சியினால் வழங்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் மத்திய வங்கியின் ஆளுநரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.