மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம்அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதாவது எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச முறைமைகளுக்கு அமைய, 45 நாட்களுக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டாய தேவைகளுக்காக மூடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.