News
வாடகை வாகனங்களுக்கு அதிக நிதியைச் செலவிடும் அரச நிறுவனங்கள்.
அரச நிறுவனங்களால் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்காக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொது நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்போது 4,427 வாகனங்களை பொது நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றுக்காகவே வருடாந்த வாடகையாக 2,562 மில்லியன் ரூபாய் செலுத்தப்படுகிறது என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொது நிறுவனங்களால் 2024 மார்ச் 1ஆம் திகதி நிலவரப்படி சுமார் 69,121 வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.