இலங்கை கிரிக்கெட் அணி தலைவருக்கு தண்டனை: ஐசிசி அதிரடி
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கடைசி ஒருநாள் போட்டியின் கட்டணத்தில் 50% அபராதமும், மூன்று டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் முடிவில் அணி வீரர்கள் கைகுலுக்கிய போது நடுவர்களை திட்டியதற்காக மெண்டிஸுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியின் போது நடுவரை விமர்சித்ததற்காக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் கண்காணிப்பில் இருந்தார்.
ஹசரங்கவின் நடத்தை தொடர்பாக நடுவர், போட்டி நடுவரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தோடு, ஹசரங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடந்த கால விதிமீறல்களில் இருந்து திரட்டப்பட்ட முந்தைய டிமெரிட் புள்ளிகள் மூலம், பல சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.