News

அரசாங்கம் மீது நம்பிக்கை இழக்கும் இலங்கையர்கள்: ஆய்வில் வெளியான தகவல்

அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை பெப்ரவரி மாதத்தில் 7% ஆக குறைந்துள்ளதாக வெரிட்டே ஆய்வு தெரிவித்துள்ளது.

‘தேசத்தின் மனநிலை’ எனும் தொனிப்பொருளில் சமீபத்தில் நடாத்தப்பட்ட வெரிட்டே ஆய்விலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஒக்டோபர் மாதத்தில் 9% ஆக இருந்த மக்களின் நம்பிக்கை 2024 பெப்ரவரி மாதத்தில் 7% ஆக குறைந்துள்ளது.

அத்துடன், தற்போதைய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என 9 சதவீதமானவர்கள் மட்டுமே மதிப்பிட்டுள்ளதாக கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, 90 சதவீதமானவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button