Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஜூன் மாதம் தேர்தல்..! ரணிலின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் சமகால அரசியல் நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் அனுபவத்தின் பிரகாரம் தற்போது பொதுத் தேர்தல் ஒன்று நாட்டுக்கு சாதகமானதாக அமையும். இல்லையேல் பாதகமான சூழ்நிலை உருவாகலாம் என பசில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் அதிபர்த் தேர்தலை நடத்துவதில் ரணில் விக்ரமசிங்க தீவிரமாக உள்ளார். அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குறைவடைந்தது எரிபொருள் விற்பனை : உரிமையாளர்கள் எடுக்கவுள்ள முடிவு

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத கொமிஷனில் 18 வீத வற் (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை நிறுத்துமாறு அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் செவ்வாய்க்கிழமை(09) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானமொன்றினை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button