News
டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பில் கடந்த வாரம் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8% அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 15.5% ஆகவும், பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு எதிராக 9% ஆகவும் உயர்ந்துள்ளது.
யூரோவுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 10.5% ஆகவும் இந்திய ரூபாய்க்கு எதிராக 8.5% ஆகவும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.