News
		
	
	
இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் இவ்வருடம் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த வருடத்தில் நாடு அனைத்து துறைகளிலும் வழமை நிலை திரும்பும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்புவதால் சிங்கள, தமிழ் புத்தாண்டை ஓரளவு மக்கள் கொண்டாடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.




