News

இன்றிலிருந்து எரிபொருள் தட்டுப்பாடு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றிலிருந்து இந்த நிலைமை ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி (VAT Tax) காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன (Kapila Navuthunna) சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரி. இதனால் அதற்குரிய வற் தவணைகள் இன்டு முதல் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படாவிட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

கடந்த மூன்று மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று முதல் எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் இதனால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக வற் வரி செலுத்த நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button