இலங்கையின் கடற்கரைத் திட்டம்! முந்திச்சென்றது இந்தியா.
இலங்கையிலுள்ள கடல்களுக்கு ‘நீலக் கொடி கடற்கரைகள்’ சான்றிதழை பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த சான்றிதழை பெரும்பொருட்டு இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இருபத்தெட்டு (28) கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சான்றிதழினை பெற்றுக்கொள்வதற்கு 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுவதனால் அந்த நிபந்தனைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் இலங்கைக்குப் பின்னர் இந்த முயற்சியை ஆரம்பித்த இந்தியா, ஏற்கனவே எட்டு கடற்கரைகளுக்கான ‘நீலக்கொடி கடற்கரைகள்’ சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், அதேசமயம், சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக தாம் ஆரம்பித்த திட்டத்தை இலங்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் உரிய தலைவர் வலியுறுத்தினார்.
நீலக் கொடி சான்றிதழானது கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான சுற்றுலாப் படகுகளுக்கான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ விருதுகளில் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.