News

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு.

சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள சட்டம் தொடர்பான வரைவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakse) ஆகியோர் கூட்டாக அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளனர்,

தமது மூன்றாவது தவணை 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்திருந்த நிலையில் குற்றத்தின் வருமானம் அல்லது நன்மைகளை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் சட்ட வரைவே அமைச்சரையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவரைவு குற்றத்தின் வருவாய் சட்டம், கட்டுப்பாடு, பாதுகாத்தல், கைப்பற்றுதல், பாதுகாப்பு, மேலாண்மை, நீதித்துறை முடக்கம் மற்றும் குற்றத்தின் வருவாயை பறிமுதல் செய்தல் ஆகியவற்றை பரிந்துரைக்கிறது.

குற்றத்தின் வருவாயை தண்டனைக்குப் பின்னர் பறிமுதல் செய்தல் மற்றும் குற்றத்தின் வருவாயை தண்டனையின் அடிப்படையில் பறிமுதல் செய்தல் என்பன இதில் உள்ளடங்குகின்றன.

குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற அனுமதிக்கும் சிவில் தீர்வுகளையும் இந்த சட்டம் முன்மொழிகிறது.

கொள்ளை, இலஞ்சம், தரகு அல்லது பிற திருப்திக்காக குற்றச்செயல்கள் மூலம் பெறப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டம் இலங்கையில் இதுவரை இல்லை, அதை சரிசெய்வதே உத்தேச சட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்த சட்டம் இங்கிலாந்தின் குற்றச் செயல்கள் சட்டத்தில் உள்ள கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மேலும், சட்டம் அமுல் செய்யப்பட்டதும் இலஞ்சம் மற்றும் ஊழல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பெரும் வருமானத்தை ஈட்டும் பிற குற்றங்களின் வருமானத்திற்கும் குறித்த சட்டம் பொருந்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button