வடக்கின் முக்கிய மாவட்டத்திலும் துறைமுக நகரம்..!
மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவி இது என்பதை மறந்து விடாதீர்கள்.
2015ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது போன்ற முயற்சிகளில், தேசத்தை உயர்த்துவதற்கான ஒரு பார்வை அவருக்கு உள்ளது.
மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கும், இந்தியாவுடனான படகு சேவையை புத்துயிர் பெற செய்வதற்கும் ஜனாதிபதியின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
அதிகமாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளின் வருமானத்தை அதிகரிக்க ராமர் பாலம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க அரசியலில் நீண்டகாலம் இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதல் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.