அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை!
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அரச நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை மீதப்படுத்துகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதே இந்த நிறுவனத்தின் பிரதான வருமான ஆதாரமாகும்.
இதற்கு சுங்க மற்றும் கலால் துறையினரும் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த நிறுவனங்களில் இடம்பெறும் திருட்டு, மோசடிகள் மறையும்.
ஆனால், கடத்தல்காரர்களும், சில அதிகாரிகளும் இதை அனுமதிப்பதில்லை. இந்த துறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஒருமுறை மோட்டார் வாகனத் திணைக்களம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் உரிமையை இராணுவத்துக்கு வழங்கியது. இவ்வாறு பல அனுகுமுறைகளை கையாண்டது.
இந்த நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் பிரதான நிறுவனங்கள். எதிர்காலத்தில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இலக்கத்தகடு வழங்கும் முறையும் மாற்றப்படும் என்றார்.
நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது.
கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் வெளிநாட்டு கடனை செலுத்தும் சட்டம் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.