தரக்குறைவான அரிசி தொடர்பில் உடனடி விசாரணை
நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26.04.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை” என கூறியுள்ளார்.