Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி!

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில், பல்கலைக்கழக அனுமதி குறித்த மாணவர் கையேடு இன்னமும் வெளியிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மாணவர் கையேடு வெளியீடுவது கால தாமதமாகியுள்ளதோடு, கையேட்டை வெளியீடாது மாணவர்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என கூறப்படுகின்றது.

அத்தோடு, கையேட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தினால் பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button