ஜனாதிபதியால் ஆளுநர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தலைமையிலான இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கையின் (Sri Lanka) ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதத்தின் நடுப்பகுதிக்கு முன்னதாக அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் பூர்த்தி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் கடந்த ஆண்டின் இறுதியில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக மாகாண மட்டங்களிலான அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடி, தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஆளுநர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது பொது மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.