சிறிலங்காவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள UPI வலையமைப்பு
இந்தியா (India) வின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சிறி லங்காவின் தேசிய கட்டண வலையமைப்பான லங்காபே (LankaPay) சர்வதேச வலையமைப்பான யூனியன்பே இன்டர்நேசனல் (UPI) உடனான தனது கூட்டாண்மையை எல்லை தாண்டிய தன்னியக்க இயந்திரங்களுக்கு (ATM) விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கையை அண்மையில் இரண்டு தரப்புகளும் மேற்கொண்டிருந்தன.
குறித்த செயற்பாடானது சிறிலங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கும் நோக்கில் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதனை நோக்காமாக கொண்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் சிறிலங்கா முழுவதும் உள்ள தன்னியக்க இயந்திரங்களை அணுகுவதற்கு இந்த விரிவான வலையமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யூனியன்பே (UnionPay) சிறிலங்காவில் 99 வீத தன்னியக்க இயந்திர வசதிகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.