News

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசல் விலை 307 ரூபாயை எட்டினால் மட்டுமே பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டண தேசிய கொள்கைகளுக்கு அமைய, 4 சதவீதமான எரிபொருள் குறைப்புக்கு மாத்திரமே கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும்.

நேற்றைய தினம் டீசல் விலை 2.5 சதவீதமே குறைக்கப்பட்டுள்ளதால், பேருந்து கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button