News

மாணவர்களுக்கான பேருந்து சேவை அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சித்தகவல்

பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் இணைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC) பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் (Sri Lanka Transport Board) 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு (1537) பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்காக மானியமாக 2,000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேருந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு NTC வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் NTC க்கு முன்மொழிவை அனுப்பிய பின்னர், அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button