உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா..!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணி 09 ஆட்டமிழப்புக்கள் வித்தியாவத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை, ஒரு ஆட்டமிழப்பை மட்டும் இழந்து அவுஸ்திரேலியா அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இந்தூரில் நடைபெற்ற குறித்த போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சை 109 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த, அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களை எடுத்தது.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 163 ஓட்டங்களக்கு மட்டுப்படுத்தப்பட்டதால், அவுஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 76 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 04 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என முன்னிலை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை முன்னிலைபெற வேண்டுமாயின், அவுஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
அதற்கமைய இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றுவிடும்.
இதனிடையே, அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், 9ம் திகதி ஆரம்பமாகும் நியூசிலாந்து இலங்கை டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைக்கப்பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.