கிரிக்கெட் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு தேவை
வரலாற்றில் முதன்முறையாக T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் இருந்து இலங்கை அணி வௌியேறியுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சரும் இது குறித்து கருத்து வெளியிட்டார்.
இவ்வாறு போட்டியில் தோல்வியடைவது பல வருடங்களாக உள்ள பிரச்சினை எனவும் அதனை தீர்க்க நீண்டகால தீர்வு தேவை எனவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
கேள்வி – விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் கிரிக்கெட்டுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
“இனி நான்தான் கிரிக்கெட் ஆட வேண்டும். விளையாட்டு அமைச்சராக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்கள். இனி போட்டியில் தோற்றால் நான் என்ன செய்வது?”
நான்தான் கிரிக்கெட் ஆட செல்ல வேண்டும்.
அப்படி செய்ய முடியாது. இது பல வருடங்களாக தொடரும் பிரச்சனை. நீண்ட கால தீர்வு தேவை.
நாங்கள் பொறுப்பேற்றபோது இது தடைசெய்யப்பட்டிருந்தது. எல்லாமே குழம்பி உள்ளது.”