ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர் ஒருவரை 2015 ஆம் ஆண்டு டிபெண்டரில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு இதுவரையில் விதிமுறைகள் எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், அவர் தனிப்பட்ட முறையில், நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்துடன் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அமர்வு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.