News
வெளிநாடொன்றை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுவிப்பு
பெரு நாட்டின் (Peru) கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று (28) பெய்ஜிங் நேரப்படி மதியம் 1:36 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவானதாக சீன (China) நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடற்பகுதிக்கு அடியில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடரந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரு நாட்டில் சுமார் 33 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் அந்நாட்டை தாக்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.