News
ஐரோப்பிய நாடொன்றில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை விகிதம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில்(Germany) வேலைவாய்ப்பின்மை விகிதம் சடுதியாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மத்திய வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 5.9 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் மாதமளவில் அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜூன் மாதத்தில் வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மே மாதம் நிலவரப்படி ஜேர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர்.
இதன் எண்ணிக்கை ஜூன் மாதம் 2.726 மில்லியமான உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.