Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வவுனியால் இடம்பெற்ற கோர விபத்தில் இருவா் பலி

வவுனியா – கன்னாட்டி பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் வீட்டிற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த கென்ரர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற அவர்கள் மீது மோதியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்றொரு சிறுவன் கென்ரர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 36 வயதான சிவலோகநாதன் சுபோகினியும் 6 வயதான அவரது மகள் டினுசிகாவும் உயிாிழந்தனா்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது கென்ரர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர்.

விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில், ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் சுற்றிவளைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்ப்பட்டதாக தொிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளா் தொிவித்தாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் சடலங்களை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button