Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கிழக்கு மாகாணத்திற்கும் விரைவில் விமான சேவை..!

கிழக்கு மாகாண விமான சேவை தொடர்பில் ஆளுநர், அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர், சுற்றுலா பணியகத்தினர், விமானப்படையினர், Cinnamon Air, Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் cinnamon Air தனது விமானச் சேவையை எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button