Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்பனம்!

சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக்கொண்ட கல்வி நிறுவனமாக இயக்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை புதுப்பொழிவுடன் ஆரம்பித்துள்ளது.

இந் நிகழ்வு 27.07.2024 ம் திகதி காலை 9.30 மணிக்கு அதன் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவின் பேராசிரியர் திரு. கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜே.சேதுரத்னம் அவர்களும் பம்பலபிட்டி பொலீஸ் நிலைய அதிகாரி திரு. அபேரத்ன அவர்களும், இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தின் தலைவர் அந்தோ தினேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த புதிய சேவையின் மூலமாக இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பல பாடநெறிகள் இலகுவாக கற்கக் கூடிய சேவையும் மேலும் நவீன கற்றல் முறைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Diploma முதல் HND, Degree, Master, PhD, பாடநெறிகளான Psychology, Teacher Training, Business Management, Caregiver, Childcare Center Operator, English, IELTS, IT ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு பயிலுவதற்று பல புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது. ஏன்று நிறைவேற்று பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.

மேலும் Amazon College ஆனது கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் TVEC (மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு) இல் பதியப்பட்ட நிறுவனமாகும்.

மேலதிக விபரங்களுக்கு

0765 204 605
www.amazoncollege.lk

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button